search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடன் தள்ளுபடி"

    • 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு
    • வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைப்பு

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் சத்யா நகர் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 15 பேர் இன்று காலை கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் இந்த முகாமில் வசித்து வருகிறோம். மொத்தம் 35 குடும்பங்கள் உள்ளன. கரிச்சிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 5 பவுன் குறைவாக நகை அடகு வைத்துள்ளோம். தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி என்று அறிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் எங்களை போன்றவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவ மழையால் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் தகவல்
    • 23 ஆயிரத்து 578 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் 2037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 4974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும்,

    3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.76 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் தள்ளுபடி: கலெக்டர் தகவல்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழுள்ள நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன் படிகடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்ட 181 கூட்டுறவு நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதலின்படி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய முறையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் 29,172 பயனாளிகளுக்கு ரூ.114.25 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர்.
    • இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 மார்ச் 31 வரை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன் அடிப்படையில் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

    அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர்.

    இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் விதிகளை மீறி தள்ளுபடி பெற்றவர்களின் நகைக்கடன்களை திரும்ப வசூலிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 37,984 பேரின் நகைக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.160 கோடி பறிமுதல் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்வதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு கட்டமாக நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 14.40 லட்சம் பேரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளின் 100 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த கடன் தொகையை வட்டியுடன் கணக்கிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஏதுவாக தற்போது கூட்டுறவு சங்கங்களிடம் அரசு விவரம் சேகரித்து வருகிறது.

    இதற்காக அரசாணை வெளியிட்டு நவம்பர் 1-ந்தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகை தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
    கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 13-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

    தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியிருந்தார். அதில், கூட்டுறவு நிறுவனங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரு குடும்பத்தினர் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில், ஒரு சில கடன்தாரர்கள் தங்களின் கடன் தொகையை பகுதியாகவோ, முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.17 ஆயிரத்து 115 கோடியே 64 லட்சம் தொகையாகும்.

    கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பொது நகைக்கடனை பகுதியாகவோ முழுமையாகவோ திருப்பி செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர், அசல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்ட நிலுவையாக ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இந்த நகைக்கடனை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

    நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் உள்ள கடனை, அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்பட்டமான நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நகைக்கடன் தள்ளுபடி திட்டம் மூலம் தமிழகத்தில் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள். வழிகாட்டு நெறிமுறைகளில் கூடுதல் நெறிமுறைகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவு சங்க பதிவாளர் ஏற்படுத்தலாம்.

    கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து, அதாவது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பு தொகையில் இருந்து வழங்கப்பட்டு உள்ளதால், அசல் தொகை மற்றும் வட்டியை அரசு ஏற்றுக்கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையை வழங்கும்.

    பொதுநகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, தகுதியான நபர்கள் கண்டறியப்பட வேண்டும். அதற்காக ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு, கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டு பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    எனவே கடன் தள்ளுபடி, தகுதியற்ற நபருக்கு சென்றடையக்கூடாது. அதே நேரம் முழுத்தகுதியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பம் விடுபட்டுவிடக்கூடாது.

    ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றிருந்து, அவர்களின் அனைத்து பொதுநகைக்கடனை சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்கு உட்பட்டு இருந்தால், மற்ற தகுதிகளுக்கு உட்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    5 பவுனுக்கு மிகாமல் நகையீட்டின் பேரில் நகைக்கடன் பெற்று மார்ச் 31-ந் தேதியன்று கடன் நிலுவையில் இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தப்பட்ட கடன், தள்ளுபடிக்கு தகுதி பெறாத இனமாக கருதப்படும்.

    ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒரே நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் மூலம் 5 பவுனுக்கு மேற்பட்டு அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகைக்கடன் மற்றும் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன் தள்ளுபடி இனத்திற்கு வராது.

    மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன், 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதின் பயனடைந்தவர்கள் மற்றும் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அவரின் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்; எந்த பொருளும் வேண்டாத ரேஷன் கார்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர் பெற்ற நகைக்கடன்;

    மத்திய மற்றும் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர், குடும்பத்தினர், அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் அல்லது காலமுறை அடிப்படையில் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவோர், அரசு ஓய்வூதியர்கள் (குடும்ப ஓய்வூதியர்கள் தவிர) பெற்ற நகைக்கடன்; நகையே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன்; போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

    சுயவிருப்பம் பேரில் நகைக்கடன் தள்ளுபடி பெற விருப்பம் இல்லாதவர்கள்; புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள் கொடுத்தவர்கள்; ஆதார் கார்டில் புதுச்சேரி உள்ளிட்ட வேறு மாநில முகவரிகள் இருப்பவர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படக்கூடாது.

    எடை, தரம், தூய்மைக்குறைவு, தரக்குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, அந்த நகைக்கு வழங்கப்பட வேண்டிய அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×